ஐரோப்பாவின் முன்னணி அணிகள் பங்கேற்கும் 2020 யூரோ கால்பந்து (Euro 2020) போட்டித் தொடர், தற்போது நடைபெற்றுவருகிறது. குரூப் பி பிரிவில் நேற்று (ஜூன் 22) நடைபெற்ற ஆட்டத்தில் பின்லாந்து அணி பெல்ஜியம் அணியை எதிர்கொண்டது.
பெல்ஜியம், இங்கிலாந்து வெற்றி
தொடக்கம் முதலே பெல்ஜியம் கோல் அடிக்க தீவிரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் முதல் பாதியில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஓன் கோல் மூலமாக பெல்ஜியம் அணிக்கு முதல் கோல் கிடைத்தது. பின்லாந்து அணி வீரர் 74ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்கு ஓன் கோலை அடித்தார்.
ஆட்டத்தின் 81ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் முன்கள வீரர் லுகாகு அணிக்கு இரண்டாவது கோலை அடித்தார். இறுதியில் 2-0 என்ற கணக்கில் பெல்ஜியம் வெற்றிபெற்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
குரூப்-டி பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் செக் ரி-பப்ளிக் அணியை வென்றது. ஆட்டத்தின் 12ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ரஹிம் ஸ்டெர்லிங் அணிக்கு வெற்றி கோலைத் தேடித்தந்தார். இதன் இங்கிலாந்து அணியும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
இன்றைய ஆட்டங்கள்
குரூப் பிரிவு போட்டிகளின் இறுதி நாளான இன்று(ஜூன் 23) நான்கு போட்டிகள் நடைபெறுகின்றன.
- ஸ்வீடன் - போலாந்து
- ஸ்லோவாகியா - ஸ்பெயின்
- போர்ச்சுகல் - ஃபிரான்ஸ்
- ஜெர்மனி - ஹங்கேரி
இதையும் படிங்க:உசேன் போல்ட்டுக்கு இரட்டை குழந்தைகள்: வைரலாகும் புகைப்படம்