2018-19ஆம் ஆண்டுக்கான இங்கிலாந்து ப்ரீமியர் லீக் போட்டிகள் நடந்து முடிந்தன. இதில், கோப்பையை வெல்வதற்கான போட்டியில் மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் அணிகளுக்கு இடையே நிலவிவந்தது.
கால்பந்து: இங்கிலாந்து ப்ரீமியர் லீக் கோப்பையை வென்று மான்செஸ்டர் சிட்டி சாம்பியன்! - மான்செஸ்டர் சிட்டி சாம்பியன்
இங்கிலாந்து ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றிகரமாகத் தக்கவைத்துள்ளது.
இந்நிலையில், மான்செஸ்டர் சிட்டி அணி பிரைட்டன் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அதேசமயம், லிவர்பூல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் உல்ஃப்ஸ் அணியை தோற்கடித்தது.
புள்ளிகள் பட்டியலில் மான்செஸட்ர் சிட்டி அணி 38 போட்டிகளில் 32 வெற்றி, இரண்டு டிரா, நான்கு தோல்வி என 98 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. அதேசமயம், லிவர்பூல் அணி 38 போட்டிகளில் 30 வெற்றி, ஏழு டிரா, ஒரு தோல்வி என 97 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இதனால், மான்செஸ்டர் சிட்டி அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் இங்கிலாந்து ப்ரீமியர் லீக் கோப்பையை வெற்றிகரமாகத் தக்கவைத்துள்ளது.