கரோனா வைரஸுக்கு மத்தியிலும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலின் இரண்டாவது இடத்திலிருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் அணியும், பட்டியலில் கடைசி இடத்திலிருக்கும் ஷெஃபீல்ட் யுனைடெட் அணியும் மோதின.
போட்டி தொடங்கியதுமே ஷெஃபீல்ட் யுனைடெட் அணி தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இதில் ஆட்டத்தின் 23ஆவது நிமிடத்தில் அந்த அணியின் கீன் பிரையன் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவிலேயே ஷெஃபீல்ட் யுனைடெட் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதனை சரிகட்டும் முடிவில் இரண்டாம் பாதி ஆட்டத்தைத் தொடங்கிய மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ஹாரி மக்வாயர் 64ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்தினார்.