தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கால்பந்து: எடன் ஹசார்டு வேகத்தில் வீழ்ந்த வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணி! - Chelsea vs West Ham United

லண்டன் : வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியில் எடன் ஹசார்டின் அபாரமான ஆட்டத்தால் செல்சீ அணி 2-0 என வீழ்த்தி பிரீமியர் லீக் தொடரில் மூன்றாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.

எடன் ஹசார்டு

By

Published : Apr 9, 2019, 3:19 PM IST

2018-19 ஆண்டுக்கான பிரீமியர் லீக் தொடர் கால்பந்து போட்டிகள் லண்டனில் நடைபெற்றுவருகின்றன. இதன் நேற்றையப் போட்டியில், செல்சீ - வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக ஆடிய செல்சீ அணியின் எடன் ஹசார்டு, ஆட்டம் தொடங்கிய 24ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடிக்க, அந்த அணி முன்னிலைப் பெற்றது.

இதனையடுத்து செல்சீ அணியினர் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட, வெஸ்ட் ஹாம் யுனைடெட் வீரர்கள் செய்வதறியாது திகைத்தனர். முதல் பாதி ஆட்ட நேர முடிவில் மேலும் எந்த கோல்களும் விழாததால் செல்சீ அணி 1-0 என முன்னிலைப் பெற்றது.

எடன் ஹசார்டு

இதனையடுத்து இரண்டாம் பாதியில் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட வெஸ்ட் ஹாம் அணியின் முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. பின்னர் செல்சீ அணியினரால் கோல் போடுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் வெஸ்ட் ஹாம் அணியினரால் தடுக்கப்பட்டது. இறுதி நேர ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இரண்டாம் பாதியின் கடைசி நிமிடத்தில் எடன் ஹசார்டு இரண்டாம் கோலை அடிக்க செல்சீ ரசிகர்களின் கரவொலி விண்ணைப் பிளந்தது. இதனையடுத்து கூடுதலாக மூன்று நிமிடங்கள் வழங்கப்பட்டன. அதில் மேலும் எந்த கோல்களும் விழாததால் வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் செல்சீ அணி வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் இந்தத் தொடரில் 33 போட்டிகளில் ஆடி 66 புள்ளிகளைப் பெற்றதையடுத்து, புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது. மேலும், சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை செல்சீ அணி பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details