இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைசிறந்த மிட்-பீல்டர்களில் ஒருவர் மார்டின் பீட்டர்ஸ். 1966ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இடம்பெற்றிருந்த இவர், அந்தத் தொடரில் ஜெர்மன் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் இரண்டாவது கோலை அடித்தார். இவர் இங்கிலாந்து அணிக்காக 67 போட்டிகளில் களமிறங்கி 20 கோல்களை அடித்துள்ளார்.
1959ஆம் ஆண்டுவெஸ்ட் ஹாம் அகாதமியில் தற்காலிக வீரராக மார்டின் பீட்டர்ஸை ஒப்பந்தம் செய்தனர். அதன்பின் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இவர், யூரோ கோப்பை தொடரில் ஈஸ்ட் லண்டன் கிளப் அணி வெற்றி பெறுவதற்கும் உறுதுணையாக இருந்தார்.
தலைசிறந்த மிட் பீல்டராக விளங்கிய மார்டினை 'தி கோஸ்ட்' என்றே அழைப்பார்கள். பின்பு 1970இல் டோட்டன்ஹாம் கிளப் அணியில் இணைந்தார். அந்த அணியிலும் சிறப்பாக செயல்பட்ட இவர், 1972இல் யுஈஎஃப்ஏ கால்பந்து தொடரை டோட்டன்ஹாம் அணி வெல்ல காரணமாக இருந்தார். கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பின் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்ட இவர், பின்னாளில் டோட்டன்ஹாம் அணியின் நிர்வாகத்தில் தனது பங்களிப்பை அளித்தார்.