தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கால்பந்து: செக் குடியரசை பந்தாடிய இங்கிலாந்து அணி ! - இங்கிலாந்து vs செக் குடியரசு

லண்டன்: யூரோ கால்பந்து போட்டியின் தகுதி சுற்று ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 5-0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு நாட்டை வீழ்த்தியது.

செக் குடியரசை 5-0 என வீழ்த்திய இங்கிலாந்து அணி

By

Published : Mar 24, 2019, 9:41 PM IST

2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள யூரோ கோப்பை கால்பந்துத் தொடரின் தகுதி சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து - செக் குடியரசு அணிகளுக்கு இடையிலானப் போட்டி லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் நடைபெற்றது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய இங்கிலாந்து அணி, இந்தப் போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு நாட்டை வீழ்த்தியது. இங்கிலாந்து அணி சார்பில் ரஹீம் ஸ்டெர்லிங் அசத்தலான ஹாட்ரிக் கோல் அடித்தார். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹெரி கேனும் தனக்கு வழங்கப்பட்ட பெனால்டியை கோலாக மாற்றினார்.

இதேபோல் நடைபெற்ற மற்றொரு தகுதிச் சுற்று குரூப் ஆட்டத்தில், உலக சாம்பியன் பிரான்ஸ் 4-1 என்ற கோல் கணக்கில் மால்டோவோ அணியை தோற்கடித்தது.

ABOUT THE AUTHOR

...view details