தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இனி மெஸ்ஸி பார்சிலோனா வீரர் கிடையாது!

பார்சிலோனாவுக்காக 778 போட்டிகளில் களமிறங்கிய கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.பார்சிலோனா அணிக்கும் லியோனல் மெஸ்ஸிக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகாததால் அவர் இனி அந்த கிளப்பிற்காக விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

Barcelona
மெஸ்ஸி

By

Published : Aug 6, 2021, 9:18 AM IST

கால்பந்து விளையாட்டில், பீலே, மாரடோனா ஆகியோருக்கு அடுத்தபடியாக தலைசிறந்த வீரராகத் திகழ்பவர் மெஸ்ஸி என்று கூறினால் அது மிகையாகாது. அர்ஜென்டினாவின் ரொசாரியோவில் ஜூன் 24, 1987இல் பிறந்த இவர் தனது மூன்று வயதிலேயே கால்பந்து விளையாடத் தொடங்கினார். கடின உழைப்பால், பல படிகளைத் தாண்டி 2005இல் பார்சிலோனா சீனியர் அணியில் விளையாடத் தகுதிபெற்றார்.

இனி மெஸ்ஸி பார்சிலோனா கிடையாது

கால்பந்தில் புதிய அத்தியாயத்தை எழுதிய மெஸ்ஸி

அன்றிலிருந்து கால்பந்து விளையாட்டில் தனக்கான புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கினார். ஆறு கோல்டன் பூட், பலான் டி.ஆர். விருதுகளை வென்ற ஒரே வீரர் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரராக மெஸ்ஸி திகழ்கிறார். பார்சிலோனா அணிக்காக 700-க்கும் அதிகமான போட்டிகளில் பங்கேற்ற மெஸ்ஸியின் சுமார் 17 ஆண்டு பயணம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

சாதனை நாயகன் மெஸ்ஸி

ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை

புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகாததால், மெஸ்ஸி இனி பார்சிலோனா அணிக்காக விளையாடமாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. இது குறித்து பார்சிலோனா கிளப் கூறுகையில், "ஸ்பானிஷ் லீக்கின் நிதி விதிமுறைகளின்படி, அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெஸ்ஸியால் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியவில்லை.

17 ஆண்டு பயணத்திற்குப் பிறகு, கிளப்பைவிட்டு அவர் வெளியேறுகிறார். இளைஞராக கிளப்பில் இணைந்த அவர், உள்ளூர் முதல் சர்வதேசம் வரை பல பதக்கங்களை வென்று குவித்துள்ளார்.

பார்சிலோனாவுக்காக 778 போட்டிகள்

ஸ்பானிஷ் லீக் விதிமுறைதான் காரணமா?

நிதி தடைகள் காரணமாக, மெஸ்ஸியின் ஒப்பந்தத்தை நீட்டிக்க முடியவில்லை. புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஸ்பானிஷ் லீக் விதிமுறைகள் அனுமதிக்கவில்லை. அவருடனான ஒப்பந்தம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இனி மெஸ்ஸி பார்சிலோனா எஃப்.சி.யில் இருக்க மாட்டார். மெஸ்ஸியை மீண்டும் ஒப்பந்தம் செய்ய முடியாமல்போனதுக்கு வீரர்கள், கிளப் சார்பாக ரசிகர்களுக்கு வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

17 வரும் பயணம் நிறைவு

2017 இல் கையெழுத்திடப்பட்ட மெஸ்ஸியின் முந்தைய ஒப்பந்தத்தில், அவர் ஒரு சீசனுக்கு 138 மில்லியன் யூரோக்கள் (163 மில்லியன் டாலர்) சம்பளமாகப் பெற்றுள்ளார்.

புதிய கிளப்பில் இணைவது குறித்து மெஸ்ஸி பேச்சுவார்த்தை நடத்திவருகிறாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை கிடைத்திடவில்லை.

35 பட்டங்களை வென்று கொடுத்த மெஸ்ஸி

778 போட்டிகளில் தனியாளாக 672 கோல்

35 பட்டங்களை வென்ற பிறகு மெஸ்ஸி தற்போது பார்சிலோனா கிளப்பிலிருந்து வெளியேறியுள்ளார். அவர் நான்கு முறை சாம்பியன்ஸ் லீக், ஸ்பானிஷ் லீக் 10 முறை, கோபா டெல் ரே ஏழு முறை, ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை எட்டு முறை வெல்ல கிளப்பிற்கு உதவியுள்ளார். பார்சிலோனாவுக்காக களமிறங்கிய 778 போட்டிகளில் அவர் தனியாளாக 672 கோல் அடித்து சாதனை படைத்துள்ளார். ஸ்பானிஷ் லீக்கிலும் டாப் வீரராக வலம்வந்தார்.

கால்பந்தில் புதிய அத்தியாயத்தை எழுதிய மெஸ்ஸி

ரியல் மாட்ரிட் அணிக்கு எதிராக அவர் அடித்த 26 கோல்கள் அவரது ஆல் டைம் சாதனையாகத் தற்போதுவரை இருக்கிறது. கால்பந்து மெஜிசியனின் அடுத்த பயணம் குறித்து தகவலை அறிய அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க:டோக்கியோ ஒலிம்பிக் 14ஆவது நாள்: எந்த இடத்தில் இருக்கிறது இந்தியா?

ABOUT THE AUTHOR

...view details