2022ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடந்து வருகிறது. இதனிடையே தென் அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான தகுதிச்சுற்று போட்டிகள் சுவாரஸ்மாகியுள்ளது.
நேற்று ஈக்வடார் - கொலம்பியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. அதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடிய ஈக்வடார் வீரர்கள் 7ஆவது நிமிடத்திலேயே முதல் கோல் அடித்து அசத்தினர். அதனைத்தொடர்ந்து 9ஆவது நிமிடத்திலும், 32 மற்றும் 39ஆவது நிமிடத்திலும் கோல்கள் அடிக்க, முதல் பாதி முடிவதற்கு முன்னதாகவே 4-0 என ஈக்வடார் அணி 4-0 என்று முன்னிலைப் பெற்றது.
இதன்பின்னர் முதல் பாதி ஆட்டத்தில் கூடுதல் நிமிடங்களில் கொல்மபியா அணி முதல் கோலை அடித்தது. இதனால் முதல் பாதி முடிவில் 4-1 என்ற நிலை வந்தது.
இதையடுத்து இரண்டம் பாதியில் ஈக்வடார் அணி மேலும் 2 கோல்கள் அடிக்க, கொலம்பிய அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 6-1 என்ற கோல் கணக்கில் ஈக்வடார் அணி வெற்றிபெற்றது.
இதனால் புள்ளிப்பட்டியலில் ஈக்வடார் அணி 4 போட்டிகளில் ஆடி 3 வெற்றி, 1 தோல்வி என 9 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக்கோப்பைக்கு தகுதிபெறும். இதனால் பிரேசில் - உருகுவே, அர்ஜென்டினா - பெரு ஆகிய ஆட்டங்களில் வெற்றியாளர் யார் என்பதைப் பொறுத்து ஈக்வடார் அணியின் நிலை தெரியவரும். ஐந்தாவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு கண்டங்களுக்கு இடையில் நடக்கும் ப்ளே ஆஃப் சுற்றில் ஆட வாய்ப்பு வழங்கப்படும். அதன்மூலம் உலகக்கோப்பைக்கு தகுதிபெறலாம்.
இதையும் படிங்க:களத்திற்கு திரும்பியது மகிழ்ச்சி: ரவி சாஸ்திரி ட்வீட்