தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 20, 2020, 2:16 PM IST

ETV Bharat / sports

கொல்கத்தா கால்பந்து மைதானத்தில் சிஏஏவுக்கு எதிராக வலுப்பெற்ற போராட்டம்

கொல்கத்தா: ஐ லீக் கால்பந்துத் தொடரின் மோகன் பகன் - ஈஸ்ட் பெங்கால் அணிகளுக்கு இடையிலான போட்டியில், குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரானப் போராட்டம் நடைபெற்றது.

east-bengal-supporters-appear-with-giant-anti-caa-nrc-tifo-during-kolkata-derby
east-bengal-supporters-appear-with-giant-anti-caa-nrc-tifo-during-kolkata-derby

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் தீவிரப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று கொல்கத்தா மைதானத்தில் நடந்த ஐ லீக் கால்பந்துத் தொடரில் மோகன் பகன் - ஈஸ்ட் பெங்கால் அணிகளுக்கான இடையிலான போட்டியைப் பார்க்க வந்த ரசிகர்கள் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரானப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போட்டியின் முதல்பாதி ஆட்டத்தின் 18ஆவது நிமிடத்தில் ஜோஷெபா பெய்டியா மோகன் பகன் அணிக்காக முதல் கோலை அடித்தார். இதையடுத்து நடந்த இரண்டாம் பாதியில் அதே அணியின் பாபா 65ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தார்.

இதற்குப் பின் சில நிமிடங்களிலேயே ஈஸ்ட் பெங்கால் அணியின் மார்கஸ் 71ஆவது நிமிடத்தில் தனது அணிக்காக முதல் கோலை அடித்தார். இதற்கு பின் கோல்கள் எதுவும் அடிக்காததால், மோகன் பகன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

கால்பந்து மைதானத்தில் சிஏஏ போராட்டம்

இந்தப் போட்டிக்கு இடையிலேயே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையான கோஷங்களை எழுப்பினர். அதில் ஒரு தரப்பினர் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக, '' இந்த பூமியோடு எங்கள் இரத்தம் இணைக்கப்பட்டுள்ளது. உங்களின் சட்டத்தால் அதனை மாற்ற முடியாது'' (A paper cannot replace a land acquired through blood) என எழுதிய பெரும் விளம்பரப் பலகை காட்டப்பட்டது. இந்தப் போராட்டம் பல்வேறு தரப்பினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பயிற்சிளார்கள் மாறலாம்... மெஸ்ஸியின் ஆட்டம் என்றும் மாறாது!

ABOUT THE AUTHOR

...view details