மகளிர்களுக்கான தெற்காசிய கால்பந்து தொடர் நேபாளம் நாட்டின் பிரட்நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, இலங்கை அணியுடன் மோதியது.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. இதன் பலனாக இந்திய வீராங்கனை கிரேஸ் டெங்மேய் 4வது நிமிடத்திலும், சஞ்சு 6 வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.
இதைத்தொடர்ந்து, மீண்டும் இலங்கை அணியின் தடுப்பு வீரர்களை கடந்த இந்திய அணி, 36வது நிமிடத்தில் மூன்றாவது கோல் அடித்தது. இந்திய அணிக்காக இரண்டாவது கோல் அடித்த சஞ்சுதான் இந்த கோல் அடித்தார். இதைத்தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் முடியும் தருணத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டியை அந்த அணியை சேர்ந்த சங்கீதா கோலாக மாற்றினார்.