நடப்பு சீசனுக்கான ஐ லீக் கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற 11ஆவது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சிட்டி எஃப்சி அணி, கோகுலம் கேரளாவுடன் மோதியது. கடந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற சென்னை சிட்டி எஃப்சி அணி கோவையில் உள்ள தனது சொந்த மைதானமான நேரு மைதானத்தில் வெற்றிபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஐ லீக்: கேரளாவிடம் வீழ்ந்த சென்னை - சென்னை சிட்டி எஃப்சி vs கோகுலம் கேரளா
ஐ லீக் கால்பந்து தொடரின் 11ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சிட்டி எஃப்சி அணி, கோகுலம் கேரள அணியிடம் போராடி தோல்வி அடைந்தது.
இதைத்தொடர்ந்து, இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கும் முனைப்பிலேயே விளையாடினாலும் அவர்களால் கோல் அடிக்க முடியாமல் போனது. இதையடுத்து, ஆட்டத்தின் 79ஆவது நிமிடத்தில் கோகுலம் கேரள வீரர் மார்க்கஸ் ஜோசப் சிறப்பான கோல் அடித்தார். இதற்குப் பதிலடிதரும் விதமாக சென்னை அணி கோல் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதிவரை சென்னை அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனது.
இதனால், சென்னை சிட்டி எஃப்சி அணி 0-1 என்ற கோல் கணக்கில் கோகுலம் கேரளா அணியிடம் வீழ்ந்தது. இந்தத் தோல்வியின் மூலம், சென்னை சிட்டி அணி விளையாடிய 11 போட்டிகளில் நான்கு வெற்றி, இரண்டு டிரா, ஐந்து தோல்வி என 14 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது.