தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐஎஸ்எல்: பெங்களூரு எஃப்சியை வீழ்த்திய ஏடிகே!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஏடிகே மோகன் பாகன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தியது.

David Williams strike helps ATK Mohun Bagan pip Bengaluru FC
David Williams strike helps ATK Mohun Bagan pip Bengaluru FC

By

Published : Dec 21, 2020, 11:00 PM IST

கரோனா பாதுகாப்பு சூழலுடன் ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன் கோவாவில் நடைபெற்று வரும். பெரும் எதிர்பார்ப்புகளுடன் நடைபெற்று வரும் இத்தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஏடிகே மோகன் பாகன் அணி, சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு எஃப்சி அணியை எதிர்கொண்டது.

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏடிகே

இதையடுத்து நடைபெற்ற முதல் பாதி ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஏடிகே மோகன் பாகன் அணி தனது அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்தியது.

இதன் பயனாக ஆட்டத்தின் 33ஆவது நிமிடத்தில் ஏடிகே மோகன் பாகன் அணியின் டேவிட் வில்லியம்ஸ் கோலடித்து, அணியின் கோல் கணக்கை தொடங்கினார். இதன் மூலம் முதல்பாதி ஆட்டநேர முடிவில் ஏடிகே மோகன் பாகன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

டிஃபென்ஸில் அசத்திய ஏடிகே

இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் டிஃபென்ஸ் ஆட்டத்தை கையிலெடுத்து ஏடிகே மோகன் பாகன், பெங்களூரு எஃப்சி அணி கோலடிக்க எடுத்த அனைத்து முயற்சிகளையும் தகர்த்தது.

இதனால் இறுதிவரை போராடிய பெங்களூரு எஃப்சி அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதன் மூலம் ஆட்டநேர முடிவில் ஏடிகே மோகன் பாகன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தி அசத்தியது.

புள்ளிப்பட்டியலில் முன்னிலை

இந்த வெற்றியின் மூலம் ஏடிகே மோகன் பாகன் அணி ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளை எடுத்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது. இப்பட்டியலில் பெங்களூரு அணி 12 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது.

இதையும் படிங்க:'ஹேப்பி பர்த்டே டார்லிங்'..., மனைவிக்கு வாழ்த்து கூறிய ஹிட்மேன்!

ABOUT THE AUTHOR

...view details