ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த டேவிட் வில்லா கால்பந்து அரங்கில் 2008 முதல் 2012 வரையிலான காலக்கட்டங்களில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார். ஸ்பெயின் அணி 2008, 2012 என அடுத்தடுத்து யூரோ கோப்பை வென்றதற்கும், 2010இல் உலகக்கோப்பை கால்பந்துத் தொடரை முதல் முறையாக வென்றதற்கும் இவர் மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
ஸ்பெயின் அணிக்காக 98 போட்டிகளில் விளையாடி 59 கோல்களை அடித்துள்ளார். இதன்மூலம் அந்நாட்டு அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார்.
லா லிகா தொடரில் வலென்சியா, பார்சிலோனா, அத்லெடிகோ மாட்ரிட் போன்ற அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். குறிப்பாக, 2010 முதல் 2013 வரை இவர் பார்சிலோனா அணிக்காக மூன்று சீசன்களிலும் விளையாடி மூன்று லா லிகா, மூன்று கோபா டெல்ரே, ஒரு சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்ல துணையாக இருந்தார்.