தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

எப்ஏ கோப்பை: மான்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்தி இறுதிச் சுற்றில் செல்சீ! - எஃப்ஏ கோப்பை கால்பந்து தொடர்

எப்ஏ கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் செல்சீ அணி 1-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

David de Gea falters as Chelsea defeat Man U to reach FA Cup final
David de Gea falters as Chelsea defeat Man U to reach FA Cup final

By

Published : Jul 20, 2020, 9:21 PM IST

இங்கிலாந்தில் நடக்கும் எப்ஏ கால்பந்த தொடரில், நேற்றைய (ஜூலை 19) ஆட்டத்தில் இரண்டாம் அரையிறுதிப் போட்டியில் செல்சீ அணி, மான்செஸ்டர் யுனைடெட் அணியை எதிர்கொண்டது.

முன்னதாக நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் அர்சனல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தியது.

இந்நிலையில் நேற்றைய ஆட்டம் தொடக்கத்தில் இருந்தே கோல் அடிக்கும் முயற்சியில் செல்சீ அணி விளையாடியது. இதன் பலனாக முதற்பாதி ஆட்டநேர‌முடிவில் செல்சீ அணியின் ஸ்ட்ரைக்கர் ஒலிவர் கிரவுட் கோல் அடித்தார்.

இதையடுத்து இரண்டாம் பாதி தொடங்கிய உடனே ஆட்டத்தின் 46ஆவது நிமிடத்தில் செல்சீ வீரர் மவுண்ட் அசத்தலான முறையில் கோல் அடித்தார். பின்னர் 74ஆவது நிமிடத்தில் செல்சீ அணியின் மூன்றாவது கோலை மான்செஸ்டர் யுனைடெட் துடுப்பாட்ட வீரர் ஹென்றி மெக்யூரி தடுக்க முயன்றார்.

ஆனால் அது செல்ஃப் கோலாக மாறியது. இதையடுத்து ஆட்டத்தின் 85ஆவது மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர வீரர் ப்ரூனோ ஃபெர்னாண்டஸ் பெனால்டி கிக் முறையில் கண்டித்தார்.

இறுதியில் செல்சீ அணி இப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதைத்தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் செல்சீ அணி, அர்சனல் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details