இந்தியாவில் கடந்த மாதம் ஏற்பட்ட ஆம்பன் புயலால் கொல்கத்தா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்தன. மேலும், இப்புயலின் கோர தாண்டவத்தால் மேற்குவங்க மாநிலத்தில் லட்சக்கணக்கான மரங்கள் முறிந்தும், பல பகுதியில் சாலை வசதிகள் துண்டிக்கப்பட்டும் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன.
ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு பொதுமக்களிடம் சுனில் சேத்ரி கோரிக்கை! - இந்திய கால்பந்து அணியின் கேப்டன்
கடந்த மாதம் மேற்கு வங்கத்தை சூறையாடிய ஆம்பன் புயலால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு பொதுமக்களிடத்தில் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்படி பொதுமக்களிடம் தனது ட்விட்டர் பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்த் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், "ஆம்பன் புயலின் சேதங்கள் குறித்து இனி செய்திகள் வராது என்ற நிலையிலும், அது ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. இப்புயலால் தங்கள் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் பலரை நம்மால் காணமுடியும். அதனால் இருப்பவர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவ முன்வரவேண்டும். இதற்கென பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அதன் நம்பகத்தன்மை அறிந்து உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.