தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

நாளைமுதல் பயிற்சிக்குத் திரும்பும் ரொனால்டோ! - கோவிட்-19 பெருந்தொற்று

ஜுவென்டஸ் அணியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நாளைமுதல் பயிற்சிக்குத் திரும்பவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Cristiano Ronaldo set to resume training from Tuesday
Cristiano Ronaldo set to resume training from Tuesday

By

Published : May 18, 2020, 4:49 PM IST

கோவிட்-19 பெருந்தொற்று அச்சுறுத்தலால் பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் தங்களை சுய தனிமைப்படுத்துதலில் ஈடுபடுத்தியுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து அரசு விளையாட்டு வீரர்கள் தங்களது தனிப்பட்ட பயிற்சிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வை கடந்த வாரம் அறிவித்தது.

இதனைத்தொடர்ந்து நேற்றுமுதல் இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் அரசின் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, தங்களது தனிப்பட்ட பயிற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். அந்த வரிசையில் தற்போது உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, 14 நாள்கள் சுய தனிமைப்படுத்துதலுக்குப் பிறகு மீண்டும் பயிற்சிக்குத் திரும்பவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஜுவென்டஸ் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜுவென்டஸ் மருத்துவக் குழுவால் நேற்று பரிசோதனை மேற்கொண்ட விளையாட்டு வீரர்களில் சிலர் நாளைமுதல் ஜுவென்டஸ் பயிற்சி மையத்தில் தங்களது தனிப்பட்ட பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜுவென்டஸ் அணியைச் சேர்ந்த சில வீரர்கள் கடந்த 5ஆம் தேதிமுதல் தங்களது பயிற்சியை மேற்கொண்டுவரும் நிலையில், தற்போது அவர்களுடன் இணைந்து கிறிஸ்டியானோ ரொனால்டோவும் பயிற்சியில் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தகுந்த இடைவெளியை மீறிய கால்பந்து வீரர் கைது!

ABOUT THE AUTHOR

...view details