தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ரொனால்டோவின் 99ஆவது கோல்... யூரோவுக்கு என்ட்ரி தரும் போர்ச்சுகல் ! - ரொனால்டோ ஆட்டத்தின் 89ஆவது நிமிடத்தில் சிறப்பான கோல் அடித்தார்

அடுத்தாண்டு பல்வேறு நகரங்களில் பிராமண்டமாக நடைபெறவுள்ள யூரோ கால்பந்துத் தொடருக்கு நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி தகுதி பெற்றுள்ளது.

Cristiano Ronaldo

By

Published : Nov 18, 2019, 4:21 AM IST

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் UEFA யூரோ சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர் அடுத்தாண்டு லண்டன், பாரிஸ் போன்ற பல்வேறு நகரங்களில் பிரமண்டமாக நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இதில் பல்வேறு பிரிவுகளின்கீழ் நடத்தப்படும் போட்டிகளில் மொத்தம் 55 அணிகள் பங்கேற்றுள்ளன.

இதில், குரூப் பி பிரிவுக்கான இன்றைய லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி - லக்சம்பர்க் அணிகள் மோதின. இதில், சிறப்பாக விளையாடிய போர்ச்சுகல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் லக்சம்பர்க் அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம், அந்த அணி குரூப் பி பிரிவில் விளையாடிய எட்டு போட்டிகளில் ஐந்து வெற்றி, இரண்டு டிரா, ஒரு தோல்வி என 17 புள்ளிகளை பெற்று அடுத்தாண்டு நடைபெறவுள்ள யூரோ கால்பந்துத் தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.

இப்போட்டியில், போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ ஆட்டத்தின் 89ஆவது நிமிடத்தில் சிறப்பான கோல் அடித்தார். சர்வதேச அளவிலான போட்டியில் அவர் அடிக்கும் 99ஆவது கோல் இதுவாகும். போர்ச்சுகல் அணிக்காக ரொனால்டோ இன்னும் ஒரு கோல் அடித்தால், சர்வதேச போட்டியில் 100 கோல்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனைப் படைப்பார்.

தற்போது சர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் ஈரான் அணியின் முன்னாள் வீரர் அலி 109 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கிரிக்கெட்டில் அண்ணன் தலையை உடைத்த தம்பி - ஆஸி.யில் சுவாரஸ்யம்!

ABOUT THE AUTHOR

...view details