உலகின் மிகவும் பிரபலமடைந்த விளையாட்டாகக் கருதப்படும் கால்பந்தில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் தங்களது திறமைகளினால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளனர். அந்த வகையில் ரசிகர்களின் ஜாம்பவானாகத் திகழ்ந்துவருபவர் போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
இவர் உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை தனது அசத்தலான திறமையினால் பெற்றார். இதன்மூலம் கால்பந்து விளையாட்டில் தவிர்க்கமுடியாத வீரராக வலம்வரும் ரொனால்டோ, தற்போது கால்பந்து விளையாட்டில் மேலுமொரு சாதனைக்குச் சொந்தக்காராக மாறியுள்ளார்.
ஐரோப்பாவில் நடைபெற்றுவரும் கால்பந்து தொடரான சிரி ஏ தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜுவென்டஸ் அணி, ஸ்பல் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் ஜுவென்டஸ் அணிக்காக ரொனால்டோ களமிறங்கியதன் மூலம், சர்வதேச கால்பந்து போட்டியில் தனது ஆயிரமாவது போட்டியில் களமிறங்கி, போர்ச்சுகல் அணிக்காக 1000ஆவது போட்டியில் களமிறங்கிய முதல் வீரர் என்ற சாதனைப் படைத்தார்.