உலகின் மிகவும் புகழ்பெற்ற தொடரான இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் 13ஆம் தேதிக்குப் பின் எந்தவொரு போட்டியும் நடக்கவில்லை. இந்தத் தொடரில் 92 போட்டிகள் நடக்க வேண்டியுள்ளன.
இதனிடையே முதல்முறையாக லிவர்பூல் அணி பட்டத்தை வெல்வதற்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடர் மீண்டும் ஜூன் மாதம் 8ஆம் தேதிமுதல் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் போட்டிகள் அனைத்தும் ரசிகர்களின்றி ஆடவுள்ளதாகவும், போட்டிகளை நடத்துவதற்காக 400 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் பிரீமியர் லீக் போட்டிகளின் பங்குதாரர்களிடம் தொடரின் தலைமை அலுவலர்கள், போட்டிகளை மீண்டும் தொடங்குவதற்கான திட்டத்தைப் பற்றி ஆலோசனை நடத்தியுள்ளனர். அதில் விளையாட்டுப் போட்டிகளை மீண்டும் தொடங்குவதற்காக இங்கிலாந்து அரசிடம் பேசவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.