கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக அதிகம் உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் தற்போது இத்தாலி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இத்தாலில் இதுவரை கோவிட்-19 பெருந்தொற்றால் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.
மேலும் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கால்பந்து, டென்னிஸ், ரக்பி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்துசெய்யப்பட்டும்-வருகின்றன. குறிப்பாக, இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து போட்டிகளும் ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறாது என அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இத்தாலியின் பிரபல கால்பந்து கிளப்பான யுவென்டஸ் அணியின் முன்கள தாக்குதல் வீரர் பாலோ டைபாலா (Paulo Dybala), தனக்கும் தனது காதலில் ஓரியான சபாட்டின் (Oriana Sabatin) கோவிட்-19 பெருந்தொற்று இருப்பதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.