தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வீரர்களின் ஓப்பந்த பட்டியல் குறித்து ஃபிஃபா ஆலோசனை! - சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வீரர்களின் ஒப்பந்த பட்டியலை, பெருந்தொற்று பிரச்னை முடிவடையும் வரை நீட்டிக்கவுள்ளதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிஃபா) தெரிவித்துள்ளது.

COVID-19 outbreak: FIFA braced for challenges over player contract extensions
COVID-19 outbreak: FIFA braced for challenges over player contract extensions

By

Published : Apr 16, 2020, 11:29 PM IST

கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

அந்த வரிசையில் உலகின் அதிக ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட கால்பந்து வீளையாட்டுத் தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக சிரி ஏ, ஐரோப்பியன் லீக் போன்ற மிக முக்கிய தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வீரர்களின் வருடாந்திர ஒப்பந்தகாலமும் முடிவடையும் நிலையில் உள்ளதால், அதனை நீட்டிப்பு செய்யும் முடிவை ஃபிஃபா மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து ஃபிஃபா வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து வகையான கால்பந்து அணிகளும், வீரர்களும் ஒரு ஒப்பந்ததிற்குக் கட்டுப்படவேண்டும். அதன்படி தற்போது உங்கள் அணியிலுள்ள வீரர்களின் ஒப்பந்த காலம் நீட்டிக்கப்படவுள்ளதால் புதிய ஒரு ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும். அது என்னவெனில், பிரச்னைகள் முடிவடைந்து இயல்புநிலை திரும்பியதும் வீரர்களுக்கான ஒப்பந்த நீட்டிப்பு முடிவடையும். அதன் படி வீரர்கள், முன்னாள் கிளப், பழைய கிளப் ஆகிய பழைய ஒப்பந்தங்களை மாற்றியமைத்து புதிய ஒப்பந்தங்கள் படி செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ஆனால் ஃபிஃபாவின் இம்முடிவிற்கு பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் பல அணிகளை கொண்ட கிளப்பாக இருந்தால் என்ன செய்வது போன்ற பல கேள்விகளை அணி உரிமையாளர்கள் தொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:அவரின் திறமையை எடைபோட நீங்கள் யார்? - தேர்வுக் குழுவை வருத்தெடுத்த ஹர்பஜன் சிங்!

ABOUT THE AUTHOR

...view details