தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐஎஸ்எல் 2020: வீரர்கள், பயிற்சியாளருக்கு கரோனா உறுதி!

ஐஎஸ்எல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள் என எட்டு பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

COVID-19 in ISL: Seven players, one assistant coach test positive
COVID-19 in ISL: Seven players, one assistant coach test positive

By

Published : Oct 13, 2020, 5:25 PM IST

ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன் கோவாவில் நவம்பர் மாதம் முதல் நடைபெறவுள்ளது. இந்த சீசனில் ஈஸ்ட் பெங்கால் அணியுடன் சேர்த்து மொத்தம் 11 அணிகள் பங்கேற்கவுள்ளன. மேலும் இந்த சீசனுக்கான போட்டிகள் அனைத்தும் ஃபடோர்டா, பம்போலிம், வாஸ்கோ ஆகிய மைதானங்களில் நடைபெறும் என்ற அறிவிப்பும் வெளியானது.

கரோனா வைரஸ் காரணமாக பார்வையாளர்களின்றி நடைபெறவுள்ள ஐஎஸ்எல் தொடரில், பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள் கோவாவிற்கு வருகைதந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் கோவா வரும் வீரர், அணி ஊழியர்களுக்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையில் ஏழு வீரர்கள், ஒரு துணை பயிற்சியாளர் என மொத்தம் எட்டு பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் எந்த அணியைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.

இதைத்தொடர்ந்து கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட வீரர்கள், பயிற்சியாளர் பாதுகாப்பு விதிகளின்படி ஓட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது கால்பந்து ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: களமிறங்க தயாரான கெய்ல் - ரசிகர்கள் மகிழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details