தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கடுமையான விதிமுறைகளுடன் பயிற்சியை மேற்கொள்ளவிருக்கும் கால்பந்து அணி! - கரோனா வைரஸ் அச்சுறுத்தல்

அர்செனல்(Arsenal) கால்பந்து கிளப்பைச் சேர்ந்த வீரர்கள் வருகிற திங்கட்கிழமையிலிருந்து தங்களது கால்பந்து பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

COVID-19: Arsenal players set to resume training under strict measures
COVID-19: Arsenal players set to resume training under strict measures

By

Published : Apr 26, 2020, 1:18 PM IST

இந்த சீசனுக்கான இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துத் தொடர், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், இத்தொடரில் பங்கேற்ற வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இத்தொடரில் மிகவும் புகழ்பெற்ற அணியான அர்செனல் அணி, வருகிற திங்கட்கிழமை முதல் தங்களது அணி வீரர்களுக்குக் கடுமையான விதிமுறைகளுக்கு மத்தியில், கால்பந்து பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து அர்செனல் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கால்பந்து விளையாட்டு வீரர்கள் அடுத்த வாரம் முதல் தங்களது பயிற்சிகளைத் தொடங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. ஆனால், பயிற்சியில் பங்கேற்கும் வீரர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடித்தும், முழுமையான பாதுகாப்புடனும் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

மேலும் விளையாட்டு வீரர்கள், தங்களின் போக்குவரத்தின் போதும், உடற்பயிற்சிகள் மேற்கொள்ளும்போதும் தனிமையைக் கையாண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் மிக அவசியம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து விளையாட்டு வீரர்கள் லண்டன் காலனி பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் திங்கட்கிழமை முதல் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'உலகக்கோப்பைத் தோல்வி... டி வில்லியர்ஸ், கோலி... ': மனம் திறந்த வார்னர், வில்லியம்சன்!

ABOUT THE AUTHOR

...view details