உலகெங்கிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கோவிட்-19 பெருந்தொற்றிற்கு இதுவரை உலகம் முழுவதும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும் இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அர்ஜெண்டினாவில் ஜூலை மாதம் தொடங்க இருந்த அர்ஜெண்டினா சூப்பர் லீக் கால்பந்து தொடர், தற்போது கரோனா வைரஸின் அச்சுறுத்தலினால் ரத்து செய்யப்படுவதாக, அர்ஜெண்டினா கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.