தென் அமெரிக்க கண்டத்தின் முன்னணி கால்பந்து தொடரான 2021 கோபா அமெரிக்கா (2021 Copa America) கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டி நேற்று (ஜூலை. 3) நடைபெற்றது. இதில், அர்ஜென்டினா மற்றும் இகுவேடார் ஆகிய அணிகள் மோதின.
மெஸ்ஸி அபார ஆட்டம்
தொடக்கம் முதலே அர்ஜென்டினா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 40 வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி கொடுத்த சிறப்பான அசிஸ்ட்டை மற்றொரு வீரர் ரோட்ரிகோ கோலாக மற்றினார்.
முதல் பாதியில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியிலும் அர்ஜென்டினா அணியே அதிக்கம் செலுத்தியது. 84ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி இன்னோரு அசிஸ்ட் செய்ய அதை மார்டினேஸ் கோலாக மாற்றினார். ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் மெஸ்ஸி அணிக்கு மூன்றாவது கோலை அடிக்க அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்றது.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மெஸ்ஸி ஒரு கோல் மற்றும் இரண்டு அசிஸ்ட்டுகள் செய்து அணியின் மூன்று கோல்களுக்கும் வித்திட்டார்.வரும் 7ஆம் தேதி(ஜூலை 7) நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் கொலம்பியா அணியை அர்ஜென்டினா எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க:யூரோ 2020: காலிறுதிப்போட்டியில் ஸ்பெயின் போராடி வெற்றி!