தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கோபா அமெரிக்கா கால்பந்து: அரையிறுதியில் பிரேசில் - அர்ஜென்டினா! - Copa america football

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் வெனிசுவேலாவை வீழ்த்திய அர்ஜெண்டினா அணி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

argentina

By

Published : Jun 29, 2019, 10:58 AM IST

பிரேசிலில் நடைபெற்றுவரும் கோபா அமெரிக்கா கால்பந்துத் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற காலிறுதிப்போட்டியில், அர்ஜென்டினா-வெனிசுவேலா அணிகள் மோதின. இந்த போட்டியின் தொடக்கத்தில் 10ஆவது நிமிடத்திலேயே அர்ஜென்டினா வீரர் லாட்ரோ மார்டினெஸ் கோல் அடித்து அர்ஜென்டினாவிற்கு முன்னிலை பெற்றுத்தந்தார். அதைத் தொடர்ந்து வெனிசுவேலா வீரர்கள் கோல் அடிக்க முயற்சித்தபோது, அதை அர்ஜென்டினா வீரர்கள் சிறப்பாக தடுத்து ஆடினர்.

இரண்டாவது பாதியின் 74ஆவது நிமிடத்தில் மீண்டும் அர்ஜென்டின வீரர் ஜியோவானி லோ செல்சோ கோல் அடித்தார். மேற்கொண்டு இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால், இறுதியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கணக்கில் வெனிசுவேலாவை வீழ்த்தி அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

அர்ஜென்டினா அணி ஜூலை 3ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பிரேசில் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details