கடந்தாண்டு பிரேசிலில் நடைபெற்ற தென் அமெரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற 46ஆவது கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பிரேசில் அணி ஒன்பதாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. இதைத் தொடர்ந்து, 47ஆவது தொடர் அர்ஜென்டினா, கொலம்பியாவில் வரும் ஜூன் 12 முதல் ஜூலை 12வரை நடப்பதாக இருந்தது.
இதில், நடப்பு சாம்பியன் பிரேசில், அர்ஜென்டினா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கவிருந்தன. இதனிடையே, உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. கோவிட்-19 வைரஸால் வரும் ஜூன் மாதம் நடைபெறவிருந்த யூரோ கோப்பை கால்பந்து தொடர் அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அந்த வரிசையில் கோபா அமெரிக்கா தொடரும் இணைந்துள்ளது.