கிரிக்கெட் விளையாட்டில் களத்திலிருக்கும் வீரர்களுக்கு தலையில் அடிபட்டால், அவர்களுக்கு மாற்று வீரராக மற்றொருவரை களமிறக்கலாம் என்னும் விதியை ஐசிசி கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.
அதன்படி களமிறங்கும் வீரர் பேட்டிங், பந்துவீச்சில் அணிக்கு உதவலாம் என்பதே இந்த கன்கஷன் மாற்றுவீரர். இந்த விதியைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுசாக்னே, இந்தியாவின் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் மாற்று வீரர்களாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் கிரிக்கெட்டைப் போன்றே கால்பந்து விளையாட்டிலும் இவ்விதியைப் பயன்படுத்த சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. இதனால் சமீபத்தில் நடந்த வருடாந்திர கூட்டத்தில், அடுத்த ஆண்டு முதல் கால்பந்து விளையாட்டிலும் கன்கஷன் மாற்றுவீரர் முறையை சோதனை முடிவுசெய்யப்பட்டுள்ளது.