கடந்த ஆண்டு மார்ச் மாதம் மெக்ஸிகோவில் வட, மத்திய அமெரிக்கா & கரீபியன் கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நடைபெறவிருந்த ஆடவருக்கான கால்பந்து ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தேதி குறிபிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அதன்பின் வைரஸின் தாக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து டோக்கியோ ஒலிம்பிக் தொடர் இந்தாண்டு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ஒலிம்பிக் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஆடவர் கால்பந்து தகுதிச்சுற்று போட்டிகள் இந்தாண்டு மார்ச் 18ஆம் தேதி முதல் மார்ச் 30ஆம் தேதிவரை நடத்தவுள்ளதாக அக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது.