தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்திய கால்பந்து சம்மேளனம் ரூ. 25 லட்சம் நிதி - கோவிட் 19 செய்திகள்

கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து இந்திய கால்பந்து சம்மேளனம் ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கவுள்ளது.

Combating COVID-19: AIFF contributes Rs 25 lakh to PM Cares Fund
Combating COVID-19: AIFF contributes Rs 25 lakh to PM Cares Fund

By

Published : Apr 1, 2020, 5:40 PM IST

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கோவிட்-19 தொற்றால் இதுவரை எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக ஐரோப்பா கண்டங்களான இத்தாலி, ஸ்பெயினில் இதன் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் படிப்படியாக உயர்ந்துவருகிறது. இந்தியாவில் இதுவரை 1397 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்களில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக வரும் 14ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் தினக்கூலிகள், சிறு குறு தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையிலும், இந்த வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காகவும் உங்களால் முடிந்த நிதியை பிரதமரின் நிவாரண நிதி கணக்கிற்கு செலுத்தலாம் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த நிதியுதவிகளை செய்துவருகின்றனர்.

இந்நிலையில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கவுள்ளதாக அனைத்து இந்திய கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பிரஃபுல் படேல் கூறுகையில், "நாட்டு மக்களிடமிருந்து கிடைத்த அன்பு, கவனிப்பு, ஆதரவு ஆகியவை அனைத்து விதத்திலும் எங்களுக்கு ஊக்கத்தை அளித்துள்ளது. தற்போது அவர்களுக்கு நன்றியும் ஆதரவும் காட்ட வேண்டிய நேரம். இந்த நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்க நம்பிக்கையுடன் நாங்கள் ஒன்றாக நின்று ஒருவருக்கொருவர் உதவ வேண்டும்" என்றார்.

முன்னதாக, கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு ஹாக்கி இந்தியா ரூ. 25 லட்சமும், இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ. 51 கோடியும் நிதியுதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஒலிம்பிக் சாம்பியனுக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details