தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'நாம் எப்படிப்பட்ட இனம் என்பதை எனக்கு நினைவூட்டுங்கள்?' - சுனில் சேத்ரி - கர்பிணி யானை மரணம்

அன்னாசிப் பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையைக் கொன்ற ஈவு இரக்கமற்றவர்களை காணும் போது நாம் எப்படிப்பட்ட இனம் என்பதை நினைவூட்டுங்கள் என இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி கூறியுள்ளார்.

chhetri-questions-evolved-species-tag-of-humans-after-pregnant-elephants-death
chhetri-questions-evolved-species-tag-of-humans-after-pregnant-elephants-death

By

Published : Jun 4, 2020, 4:14 AM IST

யானைகளுக்கு தனி மரியாதை வழங்கும் கேரள மாநிலத்தில் தான் கர்ப்பிணி யானைக்கு மிகப்பெரும் கொடூரம் அரங்கேறியுள்ளது. ஆம், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கர்ப்பிணி யானை ஒன்று சுற்றித்திரிந்துள்ளது.

அதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அன்னாசி பழத்தில் வெடியை மறைத்துவைத்து, யானைக்கு உணவாக அளித்துள்ளனர். மனித மிருகத்தை நம்பிய யானையும் அதனை உண்ண, அதிலிருந்த வெடி வெடித்து, யானையின் வாய் பகுதி முற்றிலுமாக காயமடைந்துள்ளது.

ஆனால் அப்போதும் கூட அந்த யானை, மனிதர்களை ஒன்றும் செய்யாமல், அப்பகுதியிலுள்ள வெள்ளியாற்றில் இறங்கி உயிரிழந்தது. பின் உயிரிழந்த அந்த யானையை உடற்கூறாய்வு செய்ததில், அது கர்ப்பிணி யானை என்பது தெரியவந்தது.

இதையடுத்து இத்தகவல் சமூக வலைத்தளங்களில் காட்டு தீயாய் பரவியது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்த இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி தனது ட்விட்டரில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

அவரது பதிவில், ‘அவள் பாதிப்பில்லாத ஒரு கர்ப்பிணி யானை. அவளுக்கு இதனை செய்தவர்கள் நிச்சயம் அரக்கர்களாக தான் இருக்க வேண்டும். நாம் இயற்கையை ஒவ்வொரு முறையும் சோதித்து கொண்டே உள்ளோம். அதனால் நாம் எப்படிபட்ட இனம் என்பதை எனக்கு நினைவூட்டுங்கள்?’ என பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details