கரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் இதுவரை 27 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இதனால் ரசிகர்களின் பாதுகாப்பு காரணங்களைக் கருதி அனைத்து விதமான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மேலும் விளையாட்டு வீரர்கள் தங்களது குடும்பத்துடனும், சமூக வலைத்தளங்களுடனும் தங்களை பிஸியாக இருத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்திய கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லாலியன்ஸுவாலா சாங்தே, இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் பேசிய சாங்தே, “எனக்கு சுனில் சேத்ரியைக் காணும்போதெல்லாம் சிறிது தயக்கம் ஏற்படும், இருப்பினும் இப்போதுவரை நான் விளையாடிய வீரர்களில் அவரே சிறந்தவர். அப்போது நான் சிறுவனாக இருந்தேன், அச்சமயம் அவர் என்னை சஞ்சுவிற்கு மாற்று வீரராக அணியில் களமிறக்கினார். ஆனால் நான் சற்று பதற்றத்துடன் இருந்தேன். உடனடியாக அவர் என் தோள்மீது கைகளை வைத்து என்னுடைய பதற்றத்தைப் போக்கினார்.
அப்போது அவர் என்னிடன், ‘நீங்கள் மைதானத்தின் மையப்பகுதியிலிருந்து பந்தை வேகமாக கோலாக மாற்றுவதற்கு உதவி செய்யுங்கள். ஆனால் நீங்கள் ஒருபோதும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் உங்களுடைய விளையாட்டை வெளிப்படுத்துங்கள்’ என்று கூறினார். அவர் கூறிய வார்த்தைகளை நான் இன்றும் மைதானத்தினுள் செல்லும்போது நினைவில் வைத்துள்ளேன்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:இன்ஸ்டாகிராமில் புஜாராவை ட்ரோல் செய்த தவான்!