யு.இ.எஃப்.ஏ. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பார்சிலோனா மற்றும் நபொளி அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மதிப்பீட்டு ஆட்டம் இன்று நடைபெற்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது மதிப்பீட்டு ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் என்ற வீதம் சமநிலையில் இருந்தன.
இதையடுத்து இன்று நடைபெற்ற இரண்டாவது மதிப்பீட்டு ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய பார்சிலோனா அணியில் லெங்கேட் (Lenglet), ஆட்டத்தின் பத்தாவது நிமிடத்தில் கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடங்கிவைத்தார். பின் ஆட்டத்தின் 23ஆவது நிமிடத்தில் கிடைத்த பேனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்திய பார்சிலோனா கேப்டன் மெஸ்ஸி கோலடித்து அசத்தினார்.
பின் முதலாவது ஆட்டநேர முடிவின் போது வழங்கப்பட்ட கூடுதல் நேரமான 45+1ஆவது நிமிடத்தில் பார்சிலோனா அணி மீண்டுமொரு கோலடிக்க, அதேசமயம் 45+5ஆவது நிமிடத்தில் நபொளி அணியின் இன்சிக்னே(Insigne) கோலடித்து அசத்தினார்.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோலேதும் அடிக்காததால், ஆட்டநேர முடிவில் பார்சிலோனா அணி 3-1 என்ற கணக்கில் நபொளி அணியை விழத்தி வெற்றிபெற்றது. இதன் மூலன் யு.இ.எஃப்.ஏ. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கும் பார்சிலோனா அணி தகுதிபெற்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் செத்ரி, பார்சிலோனா அணியின் கேப்டன் மெஸ்ஸியை தனது ட்வீட்டர் வாயிலாக பாராட்டியுள்ளார். இதுகுறித்து செத்ரி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், 'நீண்ட நாள்களுக்கு பிறகு கால்பந்து போட்டியை தொலைக்காட்சியில் பார்த்தது, முற்றிலும் மதிப்பிக்குரியது. அதிலும் மெஸ்ஸியின் ஆட்டம் சிறப்பு' என்று பதிவிட்டுள்ளார்.