தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் ஆயிரமாவது கோல் அடித்த கொல்கத்தா வீரர் - சென்னையின் எஃப்.சி. தோல்வி

ஐ.எஸ்.எல். கால்பந்து ஆறாவது சீசனில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் அத்லெடிக்கோ கொல்கத்தா அணியிடம் சென்னையின் எஃப்.சி. அணி தோல்வியைத் தழுவியது.

isl

By

Published : Oct 30, 2019, 10:10 PM IST

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் நடைபெற்றுவருகிறது. இந்த சீசனில் இன்றைய லீக் போட்டியில் சென்னையின் எஃப்.சி. - அத்லெடிக்கோ கொல்கத்தா அணிகள் மோதின. நடப்பு சீசனில் சென்னையின் எஃப்.சி. அணி விளையாடிய முதல் போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணியிடம் தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியை சமன் செய்திருந்தது.

அதே வேளையில் கொல்கத்தா அணி தொடரின் முதல் போட்டியில் கேரளாவிடம் தோல்வியையும் அதன்பின் ஹைதராபத் அணியுடன் 5-0 என அபாரமாக வெற்றியையும் பதிவு செய்தது. இந்த சீசனில் இன்னும் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாமலிருக்கும் சென்னை அணி முதல் வெற்றியைப் பதிவு செய்யும் நோக்கிலும், ஹைதராபாத் அணிக்கு எதிராகப் பெற்ற அபார வெற்றியின் உத்வேகத்துடன் கொல்கத்தா அணியும் இன்றையப் போட்டியில் களமிறங்கின.

சென்னை ஜவர்ஹர்லால் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் சென்னை அணி களமிறங்கியது. போட்டி ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே கோல் அடிக்கும் முயற்சியில் இரு அணி வீரர்களும் செயல்பட்டனர். சென்னை பலமுறை கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது.

இன்றையப் போட்டியில் முக்கிய தருணம்

இதனால் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமில்லாமல் சமநிலையில் இருந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது பாதி தொடங்கியதும் கொல்கத்தா அணி வீரர் டேவிட் வில்லியம்ஸ் 48ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். சென்னை அணி தடுப்பாட்டத்தில் செய்த தவறால் இந்த கோல் விழுந்தது. டேவிட் அடித்த இந்த கோல் ஐஎஸ்எல் தொடரில் அடிக்கப்பட்ட ஆயிரமாவது கோல் ஆகும்.

இறுதிவரை மேற்கொண்டு இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் இப்போட்டி முடிவுக்கு வந்தது. பின்னர் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்திலும் கோல் அடிக்கும் வாய்ப்புகளை தவறவிட்டதால் சென்னையின் எஃப்.சி. அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் கோல் அடித்த டேவிட் வில்லியம் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

இப்போட்டிக்குப்பின் கொல்கத்தா அணி முதலிடத்திலும், சென்னை அணி ஏழவாது இடத்திலும் உள்ளன.

ABOUT THE AUTHOR

...view details