உலகம் முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 48 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இதனால் உலக சுகாதார அமைப்பு மக்கள் அனைவரையும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கும்படி வேண்டுகோள்விடுத்திருந்தது.
இந்நிலையில் இங்கிலாந்தின் பிரபல கால்பந்து அணியான செல்சியின் நட்சத்திர வீரர் கலும் ஹட்சன்-ஓடோய் நேற்று அதிகாலை தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் மாடல் நடிகையை தனது வீட்டிற்கு வரும்படி கார் அனுப்பியதன் விளைவாக கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் விளையாட்டு வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.