இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இங்கிலாந்து நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று (அக்.28) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் செல்சி அணி, கிராஸ்னோடர் அணியை எதிர்த்து விளையாடிது.
பரபரப்பான இந்த ஆட்டத்தின் 37ஆவது நிமிடத்தில் செல்சி அணியின் ஹட்சன் ஹோடோய் கோலடித்து, அணியின் கோல் கணக்கை தொடக்கி வைத்தார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் செல்சி அணி 1-0 என்ற கோல்கணக்கில் முன்னிலை வகித்தது.