தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

செல்சி அணியின் புதிய பயிற்சியாளராக தாமஸ் டச்செல் நியமனம்! - பிரீமியர் லீக்

செல்சி அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஃபிராங்க் லம்பார்டு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த அணியின் புதிய பயிற்சியாளராக தாமஸ் டச்செல் நியமிக்கப்பட்டுள்ளார்.

Chelsea appoint Thomas Tuchel as new head coach
Chelsea appoint Thomas Tuchel as new head coach

By

Published : Jan 27, 2021, 9:34 AM IST

இங்கிலாந்தின் புகழ்பெற்ற கால்பந்து கிளப்களில் ஒன்று செல்சி எஃப்சி. இதுவறை ஆறுமுறை பிரீமியர் லீக் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள செல்சி அணி, நடப்பு சீசன் பிரீமியர் லீக் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் பத்தாவது இடத்திற்கு சென்றுள்ளது.

இதையடுத்து, செல்சி அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஃபிராங்க் லம்பார்ட்டை அந்த அணி நிர்வாகம் அதிரடியாக நீக்கியது. மேலும் புதிய பயிற்சியாளரை விரைவில் அறிவிப்போம் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், செல்சி அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜெர்மனியைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் தாமஸ் டச்செல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து செல்சி அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “செல்சி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தாமஸ் டச்செல் நியமிக்கப்பட்டுள்ளார். பிரெஞ்சு கால்பந்து தொடரின் சாம்பியன்களான பாரிஸ் செயிண்ட்- ஜெர்மன் அணியின் பயிற்சியாளராக இவரது ஒப்பந்தம் முடிவடைவதையடுத்து, 18 மாத கால ஒப்பந்த அடிப்படையில் செல்சி அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'இந்தியாவுடனான டெஸ்ட் தொடரை கைப்பற்றுவோம்' - சில்வர்வுட்

ABOUT THE AUTHOR

...view details