ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைந்து நடத்தி வரும் UEFA சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கால்பந்தாட்ட உலகின் சூப்பர் ஸ்டார்களான அர்ஜென்டினாவின் மெஸ்ஸியும், போர்ச்சுகீஸின் ரொனால்டோவும் நேருக்கு நேர் மோதினர்.
பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸியும், யுவண்டஸ் அணிக்காக ரொனால்டோவும் விளையாடினார்கள். இரு அணிகளும் UEFA சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் குரூப் ஜி-யில் இடம் பெற்றுள்ளன. ஜூவாண்டஸ் அணி சார்பாக ரொனால்டோ, மெஸ்ஸி உடன் மோதுவது இது முதல் முறையாகும்.