ஜெர்மனி நாட்டில் கரோனா வைரசின் (தீநுண்மி) தாக்கம் கட்டுக்குள் வந்த பிறகு, அந்நாட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நடப்புச் சீசனுக்கான பண்டஸ்லிகா கால்பந்துத் தொடரை பார்வையாளர்களின்றி நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஃபிராங்ஃபர்ட் அணி வெர்டர் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோலடிக்காமல் சமநிலையில் இருந்தன.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் சிறப்பாகச் செயல்பட்ட ஃபிராங்ஃபர்ட் அணியின் சில்வா 61ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து அந்த அணியின் எல்சங்கர் (Llsanger) ஆட்டத்தின் 81, 90ஆவது நிமிடங்களில் கோலடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
ஆட்டநேர முடிவில் ஃபிராங்ஃபர்ட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெர்டர் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றிபெற்றது. இதன்மூலம் பண்டஸ்லிகா தொடரின் புள்ளிப்பட்டியலில், ஃபிராங்ஃபர்ட் அணி 49 புள்ளிகளுடன் 11ஆவது இடத்திலும், வெர்டர் அணி 30 புள்ளிகளுடன் 17ஆவது இடத்திலும் நீடிக்கின்றன.