தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கோபா அமெரிக்கா கால்பந்து - 12 வருடங்களுக்கு பின் மகுடம் சூடிய பிரேசில் - Brazil football

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பெரு அணியை வீழ்த்தி பிரேசில் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

Brazil

By

Published : Jul 8, 2019, 8:23 AM IST

தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசிலில் நடைபெற்றது. இந்த தொடரில் பிரேசில், அர்ஜென்டினா, கொலம்பியா, சிலி, பராகுவே உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றன. ஆசிய நாடுகளில் இருந்து ஜப்பான், கத்தார் அணிகளும் இந்த தொடரில் முதன்முறையாக பங்கேற்றன.

இதில் பிரேசில், அர்ஜென்டினா, சிலி, பாராகுவே உள்ளிட்ட நான்கு அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறின. முதல் அரையிறுதிப்போட்டியில் தனது பரம எதிரியான அர்ஜென்டினாவை 2-0 என வீழ்த்திய பிரேசில் அணி 10ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதேபோன்று சிலி அணியை வீழ்த்திய பெரு அணியும் இறுதிப்போட்டிக்குள் தகுதி பெற்றது.

இந்நிலையில், நேற்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் ஆட்டத்தின் 15ஆவது நிமிடத்திலேயே பிரேசில் வீரர் எவர்டன் சோர்ஸ் கோல் அடித்து அணியை முன்னிலைப் பெறச் செய்தார். அதன்பின் பெரு அணி வீரர்கள் கோல் அடிக்க கடுமையாக போராடினர். அந்த அணியின் வீரர் பல்லோ குரேரோ 44ஆவது நிமிடத்தில் கோல் அடிக்கவே இரு அணிகளும் சமநிலை பெற்றன.

முதற்பாதியில் ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் கேப்ரியல் ஜீசஸ் ஒரு கோல் அடித்ததால் பிரேசில் அணி 2-1 என முன்னிலை பெற்றது. பின்னர் இரண்டாவது பாதியில் 70ஆவது நிமிடத்தில் கேப்ரியல் ஜீசஸ் அடித்த கோல் அவருக்கு அளிக்கப்பட்ட ரெட் கார்ட்டால் வீணானது.

எனினும் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் ரிச்சார்லிசன் பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கோல் அடித்தார். இதனால் பிரேசில் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஒன்பதாவது முறையாக கோபா அமெரிக்கா கோப்பையை கைப்பற்றியது. மேலும் அந்த அணி சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த தொடரில் 12 ஆண்டுகளுக்கு பின் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் மகுடத்தை சூடியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details