2019ஆம் ஆண்டுக்கான கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் முதல் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் நட்சத்திர அணியான பிரேசிலை எதிர்த்து பொலிவியா விளையாடியது.பிரேசில் அணியில் நட்சத்திர வீரர் நெய்மர் இல்லாததால் பிரேசில் அணி எப்படி செயல்பட போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே கூடியிருந்தது. இதனையடுத்து முதல் பாதி ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட பிரேசில் அணியினரின் எல்லைக்குள் பந்தை பறிக்க முடியாமல் பொலிவியா வீரர்கள் திணறினர்.
ஆட்டத்தின் 24ஆவது நிமிடத்தில் பொலிவியாவின் அபாயகர வீரர் மார்ட்டின், கோல் அடிக்க எடுத்த முயற்சிகளை பிரேசில் வீரர்கள் தவிடு பொடியாக்கினர். தொடர்ந்து இரு அணி வீரர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவில் இரு அணிகளும் கோல்கள் எதும் அடிக்ககாததால், இரண்டாம் பாதி ஆட்டத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.
இதனையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே, பிரேசில் அணிக்கு ஃபெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதனை நன்றாக பயன்படுத்திக்கொண்ட பிலிப் கவுடினோ பிரேசில் அணியின் முதல் கோலை அடித்து அசத்த, பிரேசில் அணி ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.