தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எஃப்.சி. தோல்வி, பெங்களூரு எஃப்.சி. முதல் வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து சீசனில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எஃப்.சி. அணி மீண்டும் தோல்வியைத் தழுவி ரசிகர்களை ஏமாற்றியது.

isl

By

Published : Nov 11, 2019, 8:34 AM IST

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து ஆறாவது சீசன் தற்போது நடைபெற்றுவருகிறது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எஃப்.சி., நடப்புச் சாம்பியனான பெங்களூரு எஃப்.சி. ஆகிய அணிகள் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாமல் இருந்தன.

இந்தச் சூழலில் இரு அணிகளுக்கும் இடையேயான லீக் போட்டி பெங்களூருவில் உள்ள கண்டிரவா மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இப்போட்டியில் முதல் வெற்றியைப் பதிவு செய்யும் நோக்கில் இரு அணிகளும் களமிறங்கின.

ஹெட்டர் ஷாட் கோல் அடித்து அமர்க்களப்படுத்திய எரிக் பார்டலு

போட்டியின் முதல் நிமிடத்திலிருந்தே பெங்களூரு அணி வீரர்கள் பந்தை தங்கள் வசம் வைத்திருந்ததோடு கோல் அடிக்கும் முயற்சியிலும் களமிறங்கினர். இதனால் முதல் பத்து நிமிடங்களுக்குள் அந்த அணி வீரர்கள் தொடர்ச்சியாக கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினர். இதன் பலனாக 14ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் மிட்-ஃபீல்டரான டிமாஸ் அடித்த கார்னர் கிக்கை ஹெட்டர் ஷாட்டாக கோல் அடித்து எரிக் பார்டலு அமர்க்களப்படுத்தினார்.

பந்தை விரட்டும் பெங்களூரு அணியின் கேப்டன் சுனில் சேத்ரி

முதல் பாதி பெங்களூரு 2-0 முன்னிலை

அவரைத் தொடர்ந்து பெங்களூரு அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, 25ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து முன்னிலைப் பெற்றுத் தந்தார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் 2-0 என பெங்களூரு அணி முன்னிலை வகித்தது.

முதல் வெற்றியை ருசித்த மகிழ்ச்சியில் பெங்களூரு எஃப்.சி. வீரர்கள்

பின்னர் இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் அட்டாக் செய்யத் தொடங்கிய சென்னையின் எஃப்.சி. வீரர்கள் கிடைத்த கோல் வாய்ப்புகளை வீணடித்தனர். பின்னர் பெங்களூரு வீரர் தோங்கோசியம் ஹாவோகிப் 84ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார்.

முதல் வெற்றியை பதிவு செய்த பெங்களூரு (3-0)

அதன்பின் இரு அணி வீரர்களும் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்காததால் இறுதியில் பெங்களூரு அணி 3-0 என சென்னை அணியை வீழ்த்தி நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம் அந்த அணி ஆறு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சோகத்தில் சென்னை எஃப்.சி. ரசிகர்கள்

அதே வேளையில் சென்னையின் எஃப்.சி. அணி தொடர் தோல்விகளால் ஒரே ஒரு புள்ளியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இது சென்னையின் எஃப்.சி. ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details