தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

"அம்மாடியோவ்.. பார்சிலோனா அணிக்கு இவ்வளவு வருவாயா!" -  வாய் பிளக்கும் ரசிகர்கள்!

பார்சிலோனா: லா லிகா சாம்பியனான பார்சிலோனா அணி இந்த சீசனில் ஒரு பில்லியன் யூரோக்களை வருவாயாக ஈட்டி, அதிக வருவாய் ஈட்டும் முதல் அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது.

FC Barcelona Football club

By

Published : Sep 20, 2019, 7:52 PM IST

உலகின் முன்னணி கால்பந்து அணியாக திகழ்ந்து வரும் பார்சிலோனா அணி பல சாதனைகளையும் படைத்துள்ளது. அந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு சாதனையை தனது சாதனைப் புத்தகத்தில் பதித்துள்ளது.

அந்த சாதனையானது 2019-20ஆம் ஆண்டிற்கான உலகில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு அணிகளில் ஒரு பில்லியன் யூரோக்களை (இந்திய மதிப்பில் ஏழு லட்சம் கோடி ரூபாய்) வருவாயாகப் பெற்று வேறு எந்த அணியும் செய்ய முடியாத வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதற்கு முன் இந்த அணி 2018 ஆம் ஆண்டு 990 மில்லியன் யூரோக்களை (இந்திய மதிப்பில் 77 பில்லியன்) வருவாயாகப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அந்த அணியின் குழுநிர்வாகி ஒருவர் கூறுகையில், ’இந்த எண்ணிக்கையிலான வருவாய் மூலம் விளையாட்டு உலகில் ஒரு புதிய சாதனையைத் தற்போது பார்சிலோனா அணி படைத்துள்ளது. மேலும் இந்த வருவாயானது நாங்கள் திட்டமிட்ட ஒன்றுதான்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க...!

#UCL: "நான் திரும்பி வருவேன்னு எதிர்பார்க்கலைல" - மெஸ்ஸி இஸ் பேக்..!

ABOUT THE AUTHOR

...view details