லா லிகா கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மெஸ்ஸியின் பார்சிலோனா அணியை எதிர்த்து லெவாண்டே அணி மோதியது. இந்தப் போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நட்சத்திர அணியான பார்சிலோனா களத்தில் தீவிர ஆக்ரோஷத்துடன் செயல்பட்டது.
முதல் பாதியின்போது பார்சிலோனா அணியின் ஆர்தர், நெல்சன், சமீடோ ஆகியோர் மெஸ்ஸிக்கு பந்தை பாஸ் செய்து கோல் அடிக்க முயற்சித்தனர். இதையடுத்து லெவாண்டே வீரர் மிராமோன் ஃபவுல் செய்ததால், பார்சிலோனா அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி நட்சத்திர வீரர் மெஸ்ஸி, 38ஆவது நிமிடத்தில் பார்சிலோனா அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். முதல் பாதியில் பார்சிலோனா ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும், இரண்டாம் பாதி ஆட்டம் முழுக்க லெவாண்டே அணியின் கால்களிடமே பந்து சென்றது.
லெவாண்டே அணியின் ஃபார்வேர்ட் வீரர்கள் பார்சிலோனா அணியின் டிஃபண்டர்களின் தடுப்பாட்டத்தை 15 நிமிடங்களில் முறியடித்தனர். இதன் பலனாக லெவாண்டே அணியின் ஜோஸ் முதல் கோலை அடித்து 1-1 என சமன் செய்தார்.