தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி நெய்மர் மீதான ப்ரியத்தையும் தனது எதிர்காலம் குறித்தும் பேசியுள்ளார். அதில், ”உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் நெய்மர். அவரை பார்சிலோனா அணிக்கு மீண்டும் வரவழைக்க பார்சிலோனா நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. ஆனால் பிஎஸ்ஜி அணியின் நிர்வாகம் நெய்மரை விடுவிக்க கேட்கப்பட்ட தொகை மிகவும் அதிகம் என்பதால், நெய்மர் மீண்டும் அணிக்கு திரும்ப முடியாமல் போய்விட்டது. நெய்மர் அணிக்கு திரும்பினால் நிச்சயம் நாங்கள் எதிர்பார்க்கும் வகையில் முடிவுகள் எட்டப்பட்டிருக்கும். இருந்தும் எங்கள் அணியில் மிகச்சிறந்த வீரர்கள் உள்ளனர்.
நெய்மர் மீதான ப்ரியத்தை வெளிப்படுத்திய மெஸ்ஸி!
நட்சத்திர வீரர் நெய்மர் பார்சிலோனா அணிக்கு திரும்பியிருந்தால் மிகச்சிறந்த முடிவாக இருந்திருக்கும் என பார்சிலோனா அணி கேப்டன் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
மெஸ்ஸி
இந்த சீஸனின் இறுதியுடன் பார்சிலோனா அணியிலிருந்து மெஸ்ஸியுடனான ஒப்பந்தம் முடிவடையவுள்ளது. அதுகுறித்து கேட்டபோது, பார்சிலோனா அணியிலிருந்து வெளியேறும் திட்டம் எப்போதும் இல்லை. பார்சிலோனா அணி எனது குடும்பத்தில் ஒன்று. நான் ஓய்வு பெறும்வரை பார்சிலோனா அணிக்காகவே ஆட விரும்புகிறேன்” என்றார்.