தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் பார்சிலோனா! - மெஸ்ஸி

ஸ்பெயின்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், லயன் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு பார்சிலோனா தகுதி பெற்றுள்ளது.

முதல் கோலை அடித்தக் கொண்டாடிய மெஸ்ஸி

By

Published : Mar 14, 2019, 3:10 PM IST

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் தற்போது ஸ்பெயினில்நடைபெற்றுவருகிறது. இதில், பார்சிலோனா-லயன் அணிகள் மோதின. ஆட்டம்தொடங்கியது முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணி, 17-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சிறப்பாக செயல்படுத்தியது.

பெனால்டி வாய்ப்பில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி முதல் கோலை அடிக்க, பார்சிலோனா தனது கணக்கைத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, 31-வது நிமிடத்தில் பார்சி. வீரர் கவுண்டிகோ அடுத்த கோலை அடிக்க, முதல் பாதி நேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணி முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில், ஆட்டத்தின் 58-வது நிமிடத்தில் லயன் வீரர் லூகாஸ் அணியின் முதல் கோலை அடித்து கணக்கைத் தொடங்கினார். இதன் பின்னர் லயன் அணிக்கு சிறிய வாய்ப்பிருப்பதாக கருதப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பார்சிலோனா அணி வீரர்களின் ஆட்டம் ரசிகர்களுக்கு முழு விருந்தாய் அமைந்தது. நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஆட்டத்தின் 78-வது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை அடிக்க பார்சிலோனா ரசிகர்கள் உற்சாகத்தின் எல்லைக்கேச் சென்றனர். பார்சிலோனா அணியின் கோல் எண்ணிக்கை 3-1 என முன்னிலை பெற, தொடர்ந்து போட்டியின் 80-வது நிமிடத்திற்கு பின், பார்சிலோனா வீரர்களான பிகு மற்றும் டெம்பிலே அடுத்தடுத்து இரு கோல்கள் அடிக்க 5-1 என்ற கோல் கணக்கில் லயன் அணியை பார்சிலோன அணி வீழ்த்தியது.


இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா அணி பங்கேற்ற 30 போட்டிகளில் 27இல் வெற்றிபெற்று, மூன்று போட்டிகளில் டிரா செய்ததால், தோல்வியின்றி புதிய சாதனையைப் படைத்தது.

இந்த வெற்றியின் மூலம் சாம்பியன்ஸ் லீக் காலிறுதிக்கு பார்சிலோனா அணி தகுதி பெற்றுள்ளது. காலிறுதியில் பார்சிலோன அணி யாருடன் விளையாடவிருக்கிறது என்பது குறித்த அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details