தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கோவிட் 19: ஒரு மில்லியன் யூரோ நிதி வழங்கிய கரேத் பேல்! - கார்டிஃப் சுகாதார வாரியம்

வேல்ஷ் மற்றும் ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர கால்பந்து வீரரான கரேத் பேல்(Gareth Bale) தன் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஒரு மில்லியன் யூரோ நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

Bale donates over 1 million euros in fight against COVID-19
Bale donates over 1 million euros in fight against COVID-19

By

Published : Apr 23, 2020, 4:38 PM IST

கோவிட்-19 பெருந்தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 26 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 1.80 லட்சம் பேர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு உலக நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேல்ஷ் மற்றும் ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான கரேத் பேல், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சையளிப்பதற்காக சுமார் ஒரு மில்லியன் யூரோவை (இதன் இந்திய மதிப்பு ரூ. 8.20 கோடி) நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். மேலும் இத்தொகையினை வேல்ஷ் மற்றும் ஸ்பெயினிலுள்ள மருத்துவமனைகளுக்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கார்டிஃப் சுகாதார வாரியம் வெளியிட்டுள்ள காணொலியில், "கோவிட்-19 பெருந்தொற்றுக்கு மத்தியில் நோயாளிகளை மீட்க போராடிவரும் சுகாதார வாரியத்தின் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கவே இக்காணொலியை வெளியிட்டுள்ளேன்.

வேல்ஷ் எனக்கு சிறப்பு வாய்ந்த இடம். ஏனெனில் நான் பிறந்த இடம் அது. மேலும் அது என் நண்பர்கள், குடும்பத்தினர்களுக்கு மிகவும் பரிட்சையமான இடமும் கூட. எனவே நானும் எனது குடும்பத்தினரும் எங்களால் இயன்ற உதவியை செய்ய விரும்புகிறோம்” என்று கரேத் பேல் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:ஸ்மித், வார்னரை கொண்ட ஆஸ்திரேலிய தொடர் சிறப்பானதாக இருக்கும் - ரோகித் சர்மா!

ABOUT THE AUTHOR

...view details