ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து தொடரான லாலிகா விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இன்று (டிச. 31) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி - எல்ச் எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியின் ஆரம்பம் முதலே ரியல் மாட்ரிட் அணி தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திவந்தது. இதன் பயணாக ஆட்டத்தின் 20ஆவது நிமிடத்திலேயே அந்த அணியின் லுகா மோட்ரிக் கோலடித்து அசத்தினார்.
இதன்மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எல்ச் அணிக்கு ஆட்டத்தின் 52ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.