இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) தொடரின் ஆறாவது சீசனுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில், நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா (ஏ.டி.கே) அணி, ஜாம்ஷெட்பூர் எஃப்.சி. அணியை எதிர்கொண்டது. முதல் பாதியில் இவ்விரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, 57, 71 ஆவது நிமிடங்களில் கொலகத்தா வீரர் ராய் கிருஷ்ணா பெனால்டி முறையில் கோல் அடித்து அசத்தினார்.
ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா ஹாட்ரிக் வெற்றி! - கொல்கத்தா - ஜாம்ஷெட்பூர்
ஐ.எஸ்.எல். கால்பந்து சீசனின் நேற்றைய லீக் போட்டியில் கொல்கத்தா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தியது.
அதன்பின் 85ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணிக்கு வழங்கப்பட்ட பெனால்டியை அந்த அணியை சேர்ந்த செர்ஜியோ காஸ்டேல் கோலாக்கினார். இதனால், ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் எழுச்சிபெற்ற ஜாம்ஷெட்பூர் அணி மீண்டும் ஒரு கோலை அடித்து போட்டியை சமன் செய்யும் என எதிர்பார்க்கப்ட்டது. ஆனால் 94ஆவது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் எடு கார்சியோ கோல் அடித்து அசத்தினார்.
இறுதியில், கொல்கத்தா அணி இப்போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தியது. இந்த சீசனில் கொல்கத்தா அணி கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தப் பிறகு, தொடர்ந்து பெறும் மூன்றாவது வெற்றி இதுவாகும். இந்த ஹாட்ரிக் வெற்றியின் மூலம், அந்த அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றி, ஒரு தோல்வி என ஒன்பது புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.