ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் இன்று (நவ.20) தொடங்கியது. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஏடிகே மோகன் பாகன் அணி, பலம் வாய்ந்த கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்கொண்டது.
பாம்போலியத்திலுள்ள ஜிஎம்சி மைதானத்தில் நடபெற்ற இப்போட்டியில் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் டிஃபென்ஸ் ஆட்டத்தைக் கையிலெடுத்தனர். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோலேதுமின்றி சமநிலையில் நீடித்தது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில், அதிரடி ஆட்டத்தைக் கையிலேடுத்த ஏடிகே அணிக்கு நட்சத்திர வீரர் ராய் கிருஷ்ணா 67 ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்தினார். இதையடுத்து தொல்வியை தவிர்க்க போராடிய கேரளா அணி இறுதி வரை முயன்றும், அந்த அணியால் கோலடிக்க இயலவில்லை.
இதன் மூலம் ஐஎஸ்எல் ஏழாவது சீசனின் முதல் போட்டியிலேயே ஏடிகே மோகன் பாகன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி, வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜின் தந்தை காலமானார்...!